வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 1


அன்புள்ள Nizar Mohamed அவர்கள், தான் சார்ந்திருக்கும் அஹமதிய்யா மதத்தை பரப்புவதற்கு செய்யும் முயற்சிகளில் சிறு பங்கையேனும் குர் ஆன், ஹதீஸை ஆய்வு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இதை எழுதுகிறேன்.

ஈஸா நபி மரணத்து விட்டார்கள் என்று விஞ்ஞானம் சொல்கிறதாம், அதை மிர்சா குலாமும் சொல்லி விட்டாராம், ஆகவே மிர்சா குலாம் நபியாம்.

இது போன்ற வாதத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று எனக்கு புரியவில்லை. 
ஒரு தனி நபரின் மரணத்தைப் பற்றி விஞ்ஞானம் சொல்கிறது என்றால் மருத்துவ ரீதியாக ஆய்வு செய்து சொன்னதா? 
ஈஸா நபியின் இறப்பு சான்றிதழை எந்த அரசாங்கம் எப்போது வெளியிட்டது? 
இது என்ன வாதம்?

பொதுவாய், பிறக்கும் அனைத்து மனிதனும் ஒரு நாள் இறப்பான் என்று தான் விஞ்ஞானம் சொல்கிறது என்றால் அந்த கூற்று ஒன்றும் ஈசா நபி விஷயத்தில் பொய்த்து விடவில்லை. அவரும் இறக்ககூடியவர் தான் !

தவிர, அதை மிர்சா குலாம் என்கிற, பொய்யையே மூலதனமாக கொண்ட ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறி விட்டார் என்பதற்காக நம்ப வேண்டுமென்றால் அல்லாஹ் மீது சத்தியமிட்டு யார் எதை சொன்னாலும் ஏற்கலாம் என்கிறீர்களா?

மசீஹ் காலத்தில் பிளேக் நோய் பரவும் என்றும்,
எனக்குள் அல்லாஹ் நுழைந்து விட்டான், நான் தான் இந்த உலகையே படைத்தேன் என்றெல்லாம் பொய்களை அவிழ்த்து விட்டஒருவர், அல்லாஹ் மீது சத்தியமிட்டு ஒன்றை சொன்னால், அல்லாஹ் மீதும் பொய் சத்தியம் செய்வதற்கு இவருக்கு எந்த தயக்கமும் இல்லை என்று தான் பொருளாகுமே அல்லாமல் அவர் பேசுவதையெல்லாம் எவரும் பொருட்டாக்க மாட்டார்.

தவிர, ஈஸா நபி விஷயத்தில் இவர் முரண்படாத தெளிவான நிலைபாட்டினையாவது கொண்டிருந்தாரா என்றால் அதுவும் இல்லை. 
ஈஸா நபி இறக்கவில்லை, மீண்டும் இவ்வுலகில் வருவார் என்று இதே மிர்சா குலாம் கூறியிருக்கிறார். பார்க்க - அவரது நூல் ஆயினே கமாலாத் என்கிற நூல் பக்கம் 409.

ஈஸா நபி மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்பதாக பல்வேறு ஹதீஸ்கள் கூறுகின்றன. 
அவர் மீண்டும் வரும் போது இவ்வுலகில் எவ்வகையான சூழல் நிலவும், அவர் இவ்வுலகில் என்னவெல்லாம் செய்வார் என பல்வேறு தகவல்கள் பல்வேறு ஹதீஸ்களில் பதியப்பட்டு உள்ளன.

பொய்யையே மூலதனமாக கொண்ட ஒருவர் சத்தியமிட்டு கூறி விட்டார் என்பதற்காக ஈஸா நபி மீண்டும் வர மாட்டார் என்று கூறுபவர்கள், அல்லாஹ்வின் இறுதி தூதர் நபி (சல்) அவர்களது கூற்றினை ஏற்க மறுப்பது ஏனோ? 

சிந்தியுங்கள், நேர் வழி பெறுவீர்கள் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக