வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (A)


Thodar- 1 part - A 
அன்புள்ள nashid , 1).........நான் APRIL 30 ஆம் தேதி 6 தொடர்கள் வெளியிட்டேன் . எனது தொடரின் அடியில் நீ இவ்வாறு comment எழுதி உள்ளாய். 
அதாவது. “ ..... ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தின் மீதோ உங்கள் இமாம் மிர்சா மீதோ எந்த மரியாதையும் எனக்கு இல்லை
இதை தங்களுக்கு நினைவூட்டுவதோடு, அஹமதிய்யா கொள்கை என்பது நரகத்தில் கொண்டு சேர்க்கவல்ல மிக கொடிய கொள்கை தான் என்பதை நிரூபிக்கும் வரை இன்ஷா அல்லாஹ் நான் தொடர்வேன்.” 
என் பதில்: ............................. 
அஹ்மதிய்யா கொள்கையின் ஒரு பகுதி தான், ஹஸ்ரத் அஹ்மத் அலை நபி என்று வாதித்ததும் , அன்னாரை உண்மையான நபி என்று நாங்கள் ஏற்றுக்கொண்டதும் ஆகும். மிர்சா சாஹிப் பொய்யாக வாதித்தார் என்று வைத்துக்கொண்டாலும், அப்படி பொய்யாக வாதித்த மிர்சா சாகிபையோ or அவர்களை ஏற்றுக்கொண்ட எங்களையோ அல்லாஹு நரகத்தில் கொண்டு சேர்ப்பான் என்பதற்கு என்ன ஆதாரம்
விவாதம் நடைபெறும்போது சும்மா கொக்கரித்து விட்டால் நீ சொல்வது உண்மையாகிவிடுமா?
ஒரு ஆதாரமும் உன்னால் காட்டமுடியாது. உனது முந்திய தலைமுறையினரால் காட்ட முடியாத ஆதரமா நீ காட்ட போகிறாய்?

குரான் கூறுவது போன்று, எல்லா நபிமார்களையும் நிராகரிப்பாளர்கள் பொய் படுத்தியது போல், நீ மிர்சா சாஹிப்- பொய்ப்படுத்த முடியும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் மிர்சா சாஹிபையோ, எங்களையோ நரகத்தில் கொண்டு சேர்க்க உன் போலி தவ்ஹீதால் முடியவே முடியாது 
எனவே, நீ ஃபத்துவா கொடுப்பதை விட்டு விட்டு, ஏதாவது ஒரு நபி தோன்றினார், எனவே அவரையும், அவரை சார்ந்தவர்களையும் தண்டித்ததாக குரானில் ஒரு வசனத்தையாவது கட்ட முடியுமா?
ஆனால், நபிமார்களை பொய்படுத்தியவர்களை தண்டித்ததாக திரும்ப திரும்ப குரானில் சொல்லிக் காட்டவேண்டியதன்அவசியம் என்ன
எனவே முதலில் , ஈஸா நபி பற்றிய ஷிர்க்கை உடைத்து விட்டு , மகனே, ‘எங்களுக்கு நரகமா சொர்க்கமாஎன்பதற்கு பதில் தருகிறேன்

.2).............................’அஹ்மதிய்யா கொள்கைக்கு மறுப்புஎன்று பெரிய தலைப்பில் heading (போட்டோ) வைத்துள்ளாய். ஆனால் தலைப்புக்கு பொருத்தமாக விவாதம் செய்ய வேண்டும் என்று ஏன் உனக்கு தெரியவில்லை
எங்கள் கொள்கை என்பது முதலில் A) ஈஸா நபி விஷயம் , ஏன் என்றால், இது ஷிர்க்கின் அடித்தளமாக இருப்பதால். B) நபி ஸல் அவர்கள் இறுதி நபி அல்ல, அவர்களுக்கு பிறகு நபி வர முடியும் ; ஏன் என்றால் இது தவ்ஹீதின் அடித்தளமாக இருக்கிறது. C) மிர்சா சாஹிப் நபி ஆவார், ஏன் என்றால் அன்னார், ‘நபி ஸல் அவர்களின் மிக சிறந்த முன்மாதிரியின் படி வாழ்ந்தால் ஒருவர் நபி ஆக முடியும்’- என்பதை இவ்வுலகிற்கு காட்டி தந்தவர்..
எனவே ஈஸா நபியை பற்றி முதலில் பேச விரும்பாமல், வெறும் board வைப்பது, காலிக்குடமே! ( குறை கூடம் தான் கூத்தாடும்

3)............................. நீ இவ்வாறு எழுதிஉள்ளாய், “பிஜே என்கிற தனி நபரைப் பற்றி நீங்கள் பேசுவது பொது சபையில் உங்களை தான் தகுதிக் குறைவானவராய் காட்டும். கொள்கையை பேசுகிற போது, அதற்கான வாதப்பிரதிவாதங்கள் மட்டும் வையுங்கள். அது தான் கண்ணியம்.”
என் பதில்: ஈஸா நபி உயிரோடு இருப்பதாக கற்று தந்த PJ பற்றி பேசுவது பொது சபையில் என் தகுதியை குறைவாக காட்டும் என்று எழுதி உள்ளாய். என் மேல் காட்டும் அக்கறைக்கு நன்றி
இறைவனால் அனுப்பப்பட நபி என்று 20 கோடி மக்களால் ஏற்றுக் கொண்டிருக்கும் mirsa sahib பற்றி அவதூறு அள்ளி வீசும்போது, எங்கள் சபையில், உனது தகுதி குறையக்கூடாது என்று நானும் நினைப்பேன் அல்லவா
அதை விட மேலாக இறைவனிடத்தில் (நபியை எதிர்த்த) நிராகரிப்பவர் பட்டியலில் நீங்கள் (Comment கொடுக்கும், அன்பிற்குரிய மூத்த மருமகன் peer Mohamed , sanooth , அண்ணன் ஷாஜகான் சாஹிப் ) சேர்ந்து விடக்கூடாது என்று நானும் நினைக்கலாமல்லவா?
கண்ணியம்- என்பது பொது சபையிலா? OR இறைவனிடத்திலா?
நான் PJ வீணாக பேசுவது போன்று எழுதுகிறாய். அவர் தனி மனிதர் என்ற முறையிலோ ,ஒரு அமைப்பின் தலைவர் என்ற முறையிலோ , நான் அவரை தாழ்த்தியோ, தூற்றியோ,பேசவில்லை. ஆனால் ஈசா நபி மரணம் பற்றிய தவறான கருத்தை , மிர்சா சகிபை பற்றி தவறான கருத்தை, உங்களுக்கு கற்று தந்த pj -இன் தவறை உங்களுக்கு சுட்டிகாட்டுவதில் என்ன தவறு உள்ளது
மார்க்கத்தை பற்றி, ஒருவர் ஹலால் என்று கூறினால் அதை ஹலால் என்றும்; ஒருவர் ஹராம் என்று கூறினால் அதை ஹராம் என்றும் அப்படியே நம்பலாமா?.

தொடர்- 1 part- B 
அன்புள்ள nashid , 
நான் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு சான்றாக, குரான் 5.76; குர்ஆன் 7.26; குர்ஆன் 21.34; குர்ஆன் 20.56; குர்ஆன் 21.34 ஆகிய வசனங்களை காட்டி உள்ளேன் .
உனது பதிலில் ……… 21.34 வசனத்தை குறிப்பிட்டுஈஸா நபி என்றைக்கும் வாழ்பவர் அல்ல. அப்படி நாம் சொல்லவும் இல்லை . அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ” என்று எழுதிஉள்ளாய். 
என் கேள்வி::: 
அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்று நீ எழுதியுள்ளதற்கு ஆதாரம் என்ன? 
அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்று நீ எந்த வசனத்தின் அடிப்படையில் எழுதிஉள்ளாய்?.
ஈசாவின் ஆயுள் நீட்டிக்கப்ப ட்டிருக்கிறது என்று எந்த வசனத்தையும் காட்டாமல் நீ எழுதியதற்கு என்ன காரணம்?
ஆதாரம் காட்டாமல் சொந்த கருத்தை எடுத்து வைப்பதா விவாதம்? 
ஒரு ஆதாரமும் காட்டாமல் கிறிஸ்தவ கடவுளை உயிரோடு வைத்திருப்பது ஷிர்க்கல்லாமல் வேறு என்ன சொல்வது? 
எந்த ஆதாரமும் இல்லாமல் ஈசாவை உயிரோடு வைத்து விட்டு, நபி ஸல் மீது நம்பிக்கை இருக்கிறது என்று கூறினால் எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? 
குரான் 5.76 “மர்யமின் மகன் மசீஹ் ஒரு தூதரே அன்றி வேறு எவரும் இல்லை. நிச்சயமாக அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர் .” என்ற வசனத்தை எடுத்து வைத்தேன். 
இந்த வசனத்தின் படி, ஈஸா ஒரு தூதர் என்ற அடிப்படையில் , எல்லா தூதர்களை போன்று மரணித்து விட்டார் .
ஆனால் மேற்சொன்ன அல்லாஹுவின் வசனத்திற்கு ,குரான் வசனத்தை கொண்டு பதில் தராமல், 
அவரது ஆயுள் நீட்டிக்கபட்டிருக்கிறதுஎன்று உன் சொந்த கருத்தை கொண்டு மறுப்பதா ? எந்த துணிச்சலில் மறுத்தாய்? 
அவரது (ஈசாவின் )ஆயுள் நீட்டிக்கபட்டுள்ளதுஎன்று நீ எழுதி உள்ளதற்கு நீ ஆதாரம் காட்டவேண்டும், மட்டுமல்ல , ஈஸா உயிரோடு இருப்பதற்கான ஆதாரமும் குரானிலிருந்து காட்டவேண்டும். அவ்வாறு உன்னால் காட்ட முடியவில்லை என்றால் நீ ஷிர்க் என்னும் படு குழியில் இருப்பதாக ஒப்புக்கொள். 
நான் ,அல்லாஹுவின் வசனங்களை ஆதாரமாக காட்டிய போது , அதற்கு மாற்றுக்கருத்தை, குரான் வசனத்தின் மூலம் பதில் சொல்வது தான் உண்மையான முமினுடைய அடையாளம் ஆகும். ஆனால் எந்த வசனத்தையும் காட்டாமல் , அல்லாஹுவின் வசனங்களை குதர்க்கமாக நீ மறுத்திருப்பது , குஃப்ரின் அடையாளம் என்பதால் , நீ அல்லாஹுக்கு அஞ்சிக்கொள் என்று நான் நினைவூட்ட கடமைபட்டுள்ளேன்...


Thodar 1 part C 
அன்புள்ள nashid 
நான் ஈஸா நபி இறந்துவிட்டார் என்பதற்கு சில வசனங்களை வைத்துள்ளேன். அதாவது,
1.
ஈஸா ஒரு மனிதர் என்ற முறையில் இறந்துவிட்டார்……
2.
ஈஸா ஒரு தூதர் என்ற முறையில் இறந்துவிட்டார்........
3.
ஈஸா ஒரு பொய் கடவுள் என்ற முறையில் இறந்துவிட்டார்...........
4.
ஈஸா உண்ணாமல், குடிக்காமல் வாழ முடியாது, எனவே ஈஸா இறந்து விட்டார்......... 
5.
ஈஸா இயற்ககை கடனை செலுத்தாமல் உயிரோடு இருக்க முடியாது, எனவே ஈஸா இறந்துவிட்டார்............
6.
நபி ஸல் அவர்கள் மரணித்து விட, முந்தியவர்கள் உயிரோடு இருப்பதா ? என்ற கேள்வியின் அடிப்படையிலும் ஈஸா நபி இறந்து விட்டார். என்று பல கோணங்களில் ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளேன். மேலும் இந்த ஆதாரத்திற்கு எதிராக ஈஸா உயிரோடு இருப்பதாக நம்புவது குர்ஆனில் முரண்பாடு உள்ளதாக ஆகி விடும் என்பதற்கு குர் ஆனின் (4.83 ) என்ற வசனத்தையும் காட்டியுள்ளேன்.
இதற்கு நீ குர் ஆனில் ஈஸா உயிரோடு இருக்கிறார் என்று காட்டி உன் வாதத்தை விளக்க வேண்டும். 
அவ்வாறு ஈஸா உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு வசனத்தை கூட ஆதாரமாக காட்டாமல், நீ பொதுவிதியையும் தனி விதியையும் காரணம் காட்டி இருப்பது , உன்னிடத்தில் ஈஸா நபி விஷயத்தை பற்றி பேச ஒரு சரக்குமே இல்லை என்பது தெளிவாகிறது. 
நீ காட்டியிருக்கும் உதாரணங்கள் தவறானவை.
a)
நீ எழுதிஉள்ளாய், “தாமாக செத்தவை அனைத்தும் உண்பதற்கு ஹராம் என்பது குர் ஆனின் கட்டளை. (பார்க்க 5:3)
கடல் பிராணிகளில் தாமாக செத்தவைகளாக இருந்தாலும் அவை நமக்கு ஹலால் தான் என்று திர்மிதி 64 இல் நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.” எனவே இந்த திருமிதி ஹதீஸ் மேற்சொன்ன இறை வசனத்திற்கு முரண்படுகிறதே என்று நீ கேட்டுள்ளாய். 
என் பதில்: ) 5.3 வசனத்தை முழுமையாக படித்து பார்த்தால், தாமாக செத்தவை அனைத்தும் என்பதற்கு, நிலத்தில் தாமாக செத்தவை என்ற கருத்தில் வருவதாக எடுக்க முடியும், அதாவது ,நிலத்தில் உள்ள பிராணிகளை பற்றி தான் சொல்லபட்டிருக்கிறது. மேலும் கடல் பிராணிகளை பற்றி குரானில் வேறு எங்கும் சொல்லவில்லை. இப்படியிருக்க மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த நபி ஸல் அவர்கள், கடல் பிராணிகளில் தாமாக செத்தவைகளாக இருந்தாலும் அவை நமக்கு ஹலால் என்று கூறுகிறார்கள்.
இதில், நபி ஸல் அவர்கள் சொன்ன, ‘கடல் பிராணிகளில் தாமாக செத்தவைகளாக இருந்தாலும் அவை நமக்கு ஹலால்என்ற கருத்திற்கு எதிரான ஒரு கருத்து குரானில் எங்கேயாவது சொல்லபட்டால் தான் முரண் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாமல், குரானுடைய கருத்திர்க்கு நபி ஸல் அவர்களின் இந்த கருத்து எவ்விதத்திலும் முரண் இல்லை .

B)
அடுத்து நீ எழுதி உள்ளது , ” இறந்து போனவர்கள் செவியேற்க மாட்டார்கள், பதில் சொல்ல மாட்டார்கள் என்பது அல்லாஹ் குர் ஆனில் கூறும் பொதுவான கட்டளை.
ஆனால் ஹதீஸில், பத்ர் போரின் போது கொல்லப்பட்ட எதிரிகளின் உடலைப் பார்த்து நபி (சல்) அவர்கள் பேசுவதாகவும், அவர்கள் அதை கேட்கிறார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ், அந்த இறை வசனத்திற்கு முரண் என்று சொல்லி இந்த ஹதீஸை பொய்ப்படுத்துவீர்களா? அல்லது இது விதிவிலக்கு என்பீர்களா?”
என் பதில் : மேலே சொன்ன ஹதீசுக்கு ஆதாரம் எழுதி, உன் கருத்தையும் எழுது , பிறகு அந்த ஹதீசுக்கு நான் பதில் அளிப்பேன். 
நான் பல முறை எழுதினேன், அதாவது குரான்,ஹதீஸ், மிர்சா சாஹிப் நூல்கள் இவற்றிலிருந்து ஆதாரங்களை முழுமையாக எழுதி , மேலும் உன் ஆட்சேபனைகளை / சந்தேகங்களை நீ கேட்டால் தான், நீ என்ன புரிந்துள்ளாய் என்பதை நான் அறிந்து, என்னால் பதில் தர முடியும் என்று. நான் இவ்வாறு சொன்னதில் தவறு என்ன? இன்று குரானுக்கு தர்ஜுமா தஃப்சீர் என்ற பெயரால் வருடாவருடம் குரான் வெளி வந்துகொண்டிருக்கிறது, என்பது உனக்கு தெரியாதா?
நாவல்களையும் கட்டுக்கதைகளையும் மிஞ்சும் வகையில் குரான் தஃப்சீர் வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், நான் ஆதாரத்தை முழுமையாக எடுத்து வை என்று கூறுவதில் என்ன தவறு கண்டாய்? 
ஆதாரத்தை எடுத்து வைப்பதை விட்டு விட்டு, “மிர்சா சாஹிபின் நூல்களை நான் நேரடியாக படிக்க வேண்டும் எனவும் அவரது நூலிலிருந்து மேற்கோள் காட்டும் போது வாசகத்தை அப்படியே தர வேண்டும் எனவும் கேட்டுள்ளீர்கள். இது உங்கள் கொள்கை பலகீனத்தையே காட்டுகிறது. “ என்று நீ எழுதி உள்ளாய் . 
யூதர்களை போன்று முன் பின் கருத்துக்களை விட்டு விட்டு இடையில் உள்ள கருத்தை மட்டும் வைத்து ஏளனம் செய்கிறீர்கள். எனவே தான் முழுமையாக எழுத வேண்டும் என்று சொன்னேன்.
எனவே பதர் போரில் இறந்தவர்களிடம் பேசிய விஷயத்தை முழுமையாக எழுதி, அதில் நீ புரிந்துகொண்டது என்ன என்று எழுதினால் நான் பதில் தருவேன். அதை விடுத்து இது தெரியாதா , அது புரியாதா என்று (ஏற்கனவே எழுதிஉள்ளது போல் ) வாய் சவடால் விடாதே. அது விவாதத்திற்கு உரிய அழகு அல்ல.

C )
நீ எழுதி உள்ளது , சாமீரி என்பவன் காளை மாட்டைப் போன்ற சிலை ஒன்றை செய்து அதை அடித்த போது அது நிஜ மாட்டை போன்று சத்தம் போடுவதாய் இரண்டாம் அத்யாயத்தில் அல்லாஹ் சொல்லுகின்றான். இறந்தவர்கள் பேசமாட்டார்கள், சிலைகள் எந்த நண்மையோ தீமையோ செய்யாது என்றெல்லாம் அல்லாஹ்வின் பொதுவான கூற்றுக்கு (பார்க்க 21:63) இந்த வசனம் முரணாக இருப்பதால் குர் ஆனிலேயே முரண்பாடு உள்ளது என்பீர்களா அல்லது அந்த பொதுவான கூற்றுக்கு இந்த சம்பவம் மட்டும் விதிவிலக்கு என்பீர்களா? என்று நீ எழுதியுள்ளாய். 
என் பதில் : சாமிரியை பற்றி எங்கே சொல்லபட்டிருக்கிறது , ஆதாரம் காட்டவில்லை. 
குர் ஆன் 20:89 இல் (சாமீரி) வெற்றுடலை கொண்ட ஒரு கன்று குட்டியை உருவாக்கினான். அதிலிருந்து ஒரு பொருளற்ற ஓசை வந்தது என்றும்,எனவே அது கடவுள் என்று கூறியதாகவும் வந்துள்ளது. ஆனால் அடுத்த வசனத்தில் அந்த கன்று குட்டி அவர்களின் எவ்விஷயத்திலும் பதிலளிப்பதில்லை என்றும் அல்லாஹு சொல்லி காட்டுகின்றான். 
இதில் நீ கூறியது போல் எந்த முரண்பாடுக்கும் இடம் இல்லை.
D )
நீ எழுதி உள்ளது, “முஹம்மது நபிக்கு மறைவானவை எதுவும் தெரியாது என்று 7.188 வசனம் சொல்கிறது. அதே சமயம் மக்கா வெற்றி கியமத் அடையாளம் போன்ற மறைவான முன்னறிவிப்புகள் செய்துள்ளார்கள் . நபிக்கு மறைவானவை தெரியாது என்று குரான் சொல்லிவிட்டதால் கியமத் நாளின் அடையாளம் என்று நபி சொன்னவை அனைத்தும் பொய் என்பீர்களா? அல்லது இது விதிவிலக்கு என்பீர்களா?”
என் பதில்: நபி ஸல் அவர்கள் மனிதர் என்ற முறையில் மறைவானவை எதுவும் தெரியாது, ஆனால் நபி என்ற முறையில் அல்லாஹ் அறிவித்த மறைவான விஷயங்களை அறிவிக்கிறார்கள். குர்ஆன் என்ற வஹீயும் மறைவானவை தான். எனவே எந்த முரண்பாடுக்கும் இடம் இல்லை.
E )
நீ எழுதி உள்ளது, “தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் சொல்கிறான் மற்றொரு இடத்தில் பயணிகளுக்கு களா செய்யும் சலுகையையும் வழங்கி யிருக்கிறான் இது முரண் என்பீர்களா அல்லது விதி விலக்கு என்பீர்களா
பதில்: இதில் முரனோ விதி விலக்கோ ஒன்றும் இல்லையே. தொழுகையை பற்றி அல்லாஹ் ஒரு கட்டுரையை போன்று எழுதவேண்டும் என எதிர்ப்பார்க்கிறாயா? 5 வேளை தொழுகையை எப்போது தொழ வேண்டும், 3 வேளையாக எப்போது சுருக்க வேண்டும் என்று தானே அல்லாஹ் சொல்லுகிறான் .
ஈஸா நபி உயிரோடு இருப்பதால் அவர் தொழ வேண்டாம் என்று அல்லாஹ் சொல்லவில்லயே !
F )
நீ எழுதிஉள்ளது , பூமி மனிதருக்கான வசிப்பிடம் என்று அல்லாஹ் சொல்லுவது ஒரு பொதுவான செய்தி. அதைக்கூட எந்த context இல் அல்லாஹ் சொல்லுகிறான்? முந்தய வசனத்தில் ஆதம் நபியை சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டு பூமிக்கு அனுப்பியதாய் சொல்லிவிட்டு மனிதர்களுக்கு என்று பூமியை தங்குமிடமாக படைத்திருபதாய் சொல்கிறான். இது பொதுவான ஒரு செய்தி. எல்லா மனிதர்களும் எல்லா காலத்திற்கும் பூமியில் தான் வாழ முடியும். ஆனால் ஈஸா நபியின் விஷயத்தில் மட்டும் சில வீதி விலக்குகள் உள்ளன... என்று எழுதியுள்ளாய். 
பதில்: ஆதாரம் காட்டாமல் ஏதேதோ எழுதி குழப்புகிறாய். நீ ஆதாரத்தோடு எழுது, பதில் தருகிறேன். ஆதம் நபியை பற்றி குரானில் பல இடங்களில் வருகிறது. எனவே நீ எதை எழுதினாலும் ,குரான் வசனத்தை குறிப்பிட்டு , அதற்கு நீ என்ன கருத்து கொண்டுள்ளாய் என்பதையும் எழுது , அப்போது என் பதில் கிடைக்கும் . .
ஆனால் ஈஸா நபியின் விஷயத்தில் மட்டும் சில விதி விலக்குகள் உள்ளன என்று மனம் போன போக்கில் சொல்கிறாய்.
முதலில் ஈஸா நபி விஷயத்தில் என்ன விதி விலக்கு? காட்டு. ......................................................................................................................................................
மீண்டும் நினைவூட்டுகிறேன், நீ பொதுவிதி, தனிவிதி, விதிவிலக்கு என்றெல்லாம் கூறி ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்று உன்னால் நிரூபிக்க முடியாது. 
நான் ஏற்கனவே ஈஸா நபி இறந்துவிட்டார் என்பதற்கு சில வசங்களை வைத்துள்ளேன். அதாவது,
1.
ஈஸா ஒரு மனிதர் என்ற முறையில் இறந்துவிட்டார்……
2.
ஈஸா ஒரு தூதர் என்ற முறையில் இறந்துவிட்டார்........
3.
ஈஸா ஒரு பொய் கடவுள் என்ற முறையில் இறந்துவிட்டார்...........
4.
ஈஸா உண்ணாமல், குடிக்காமல் வாழ முடியாது, எனவே ஈஸா இறந்து விட்டார்......... 
5.
ஈஸா இயற்கை கடனை செலுத்தாமல் உயிரோடு இருக்க முடியாது, எனவே ஈஸா இறந்துவிட்டார்............
6.
நபி ஸல் மரணித்து விட, முந்தியவர்கள் உயிரோடு இருப்பதா ? என்ற அல்லாஹுவின் கேள்வியின் அடிப்படையிலும் ஈஸா நபி இறந்து விட்டார், என்று பல கோணங்களில் ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளேன்.
மேலும் இந்த ஆதாரத்திற்கு எதிராக ஈஸா உயிரோடு இருப்பதாக நம்புவது குர் ஆனில் முரண்பாடு உள்ளதாக ஆகி விடும் என்பதற்கு குர் ஆனின் (4.82 ) என்ற வசனத்தையும் காட்டியுள்ளேன். இந்த வசனத்தின் அடிப்படையில் நீ ஆழ்ந்து சிந்திக்காமல் , குதர்க்கமான பதில் மட்டும் தந்துள்ளாய். 
எனவே, நீ குர்ஆனில் ஈஸா உயிரோடு இருக்கிறார் என்று காட்டி உன் வாதத்தை விளக்க வேண்டும். 
அவ்வாறு ஈஸா உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு வசனத்தை கூட ஆதாரமாக காட்டாமல், நீ பொதுவிதியையும், தனி விதியையும், விதிவிலக்கையும் காரணம் காட்டி இருப்பது , உன்னிடத்தில் ஈஸா நபி விஷயத்தை பற்றி பேச ஒரு சரக்குமே இல்லை என்பது தெளிவாகிறது. 
Note:
மீதி தொடர்கள் நான் வெளியிடுவது வரை, நீ பதில் எதுவும் எழுதாமல், பொறுமையாக இரு, அல்லாஹு பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக